JANAARDHANA









ஜனார்தனா 
ஜகன்னாதா
நீ என் நாதன் அன்றோ
---------------------------------------------------------------
சுராசுரர் பணி பாதா
அருள் தராத காரணம் ஏனோ
தாள் மலர் விடுவேனோ
தாமதம் இனி தாளேனே
======================================
கண்ணனே நான் பட்ட பாடு
கண்டு கல்லும் கரையும்
கடலில் குளித்தொரு 
முத்தெடுத்தேன் நான்
கை நழுவ விடுவாயோ
-----------------------------------------------
கருணையே புரிவாயோ
கதி யில்லேன் கிரிதாரி

கருணையே புரிவாயோகதி யில்லேன் கிரிதாரி

த்வாரகா புரிவாசா
சோதனை போதாதோ
தரிசனம் காண தடை செய்யும்
கதவும் திறவாதோ
மீரா உன் அடிமை என்பதும் 
திருவுள்ளம் மறந்ததோ

அடியாள் மீரா மீரா ஹ்ருதயம் 
கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான் 
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும் 
 மாறா பிரேமை தந்தான்